Jan 5, 2011

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 7

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 7


** ’சிக்கனமாக செலவழிக்க வேண்டும்  என இச் சுற்றறிக்கையில் உள்ளது.
 'ஆக  என்பதற்கு அடுத்தும் வல்லினம் மிகும்.

சிக்கனமாகச் செலவழி.
தகவலுக்காகக் கூறினார்.
நல்வாழ்விற்காகத் திட்டமிடப்பட்டது.
மக்கள் நலனுக்காகச் செயலாற்று.
ஏளனமாகப் பேசாதீர்.

சான்றுகள் சில:
177)                      தொடர்ச்சியாகப் பணியாற்று
178)                      .... ஈடுபட்டதற்காகப் பணிநீக்கம்
179)                      ...... அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினர்.
180)                      ....  அளிக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள்
181)                      .... அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்
182)                      .... வாய்ப்பாகக் கருத வேண்டும்
183)                      தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
184)                      மும்முரமாகத் தேடுகின்றனர்.
185)                      பாதுகாப்பிற்காகப் பெருமளவு ....
186)                      சில மாதங்களாகத் தமிழகத்தில்
187)                      வெகுவாகத் தணிந்தது.
188)                      வேகமாகக் கொட்டுறது.
189)                      பருவ மழை விளைவாகச் சாரல் மழை பொழிகிறது.
190)                      உகந்ததாகத்  தெரியவில்லை.
191)                      ஏற்றதாகத் தெரியவில்லை.
192)                      நினைவாகக் கொண்டாடும்
193)                      நினைவாகத் தபால் தலை (அஞ்சல் தலை)
194)                      தலைவராகப் போட்டியின்றி .....
195)                      தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.
196)                      செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ....
197)                      உயிரிழந்ததாகத் தவறான தகவல்
198)                      தரிசாகக் கிடந்த
199)                      கிடைப்பதாகத் தெரிவித்தனர்
200)                      பொய்த்து விட்டதாகத் தெரிவித்தனர்.
201)                      இரண்டு ஆண்டுகளாகப் பருவமழை
202)                      குறைந்தகாலப் பயிராகப் பருத்தி ....
203)                      மேபாட்டிற்காகச் செலவழி
204)                      செவிலியராகப் பணியாற்றியவர்
205)                      இறந்துள்ளதாகத் தெரிவித்தனர்
206)                      மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டது.
207)                      திரளாகப் பங்கேற்றனர்
208)                      கம்பீரமாகக் காட்சியளிப்பது
209)                      தன்னிச்சையாகப் போர்
210)                      விடுவித்திருப்பதாகத் தெரிவித்தார்
211)                      சிக்கனமாகப் பயன்படுத்து
212)                      ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்
213)                      திட்டவட்டமாகக் கூறினார்.
214)                      வலியுறுத்தியதாகக் கூறப்படுறது.
215)                      மோதல் காரணமாகப் பதவி விலகினார்
216)                      மிரட்டியதாகக் கூறப்பகிடுறது
217)                      பாசனத்திற்காகத் திறக்கப்படுகிறது.
218)                      ஆட்சியராகப் பொறுப்பேற்றார்
219)                      .... வசதிக்காகச் சிறப்புப் பாசனம்
220)                      வாரிசாகத் திகழ்பவர்
221)                      சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
222)                      சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
223)                      திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
224)                      நடத்துவதாகக் குறிப்பிட்டார்.
225)                      இதற்காகக் குருப் பெயர்ச்சியானது....
226)                      தொடர்ச்சியாகக் கருநாடகம் ....
227)                      நேரடியாகச் சந்தித்து .......
228)                      .... விற்பனை செய்யப்படுவதாகக்  காவல்துறையினர் ....
229)                      .......  பேசியதாகத் தமிழர் தலைவர் ....
230)                      கார்களுக்காகப் போடப்படும்
231)                      சீருந்துகளுக்காகப் போடப்படும்
232)                      ...... இருப்பதாகப் பயிற்சியாளர் .....
233)                      ....... எடுத்திருப்பதாகத் தகவல்கள் ....
234)                      முடிவடைந்துள்ளதாகத் தெரிறது.
235)                      20 சதவீதமாகக்  குறைக்கலாம்.
236)                      20 விழுக்காடாகக் குறைக்கலாம்.
237)                      பகிரங்கமாகக்  குற்றச்சாட்டு
238)                      செய்திருப்பதாகத் தெரிகிறது.
239)                      குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
240)                      குற்றஞ்சாட்டப் பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
241)                      மீன் பிடிப்பதற்காகக் கடலுக்கு.....
242)                      நீண்ட காலமாகப் பகைமை
243)                      சரமாரியாகச் சுட்டதில்
  244)   பரவலாகப் பெய்தது


(தொடரும்.....)



எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 6

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!  - 6

இதில் 8 நாள் முதல் 10 நாள் முடிய விழா நடைபெறும் என உள்ளது.
 எட்டு நாள் எட்டாத நாள், பத்து நாள், பத்தாத நாள் என்றெல்லாம் இங்கு வேண்டா.
 'ஆவது என எழுத வேண்டியதுபோல் 'ஆம் என்றே எழுத வேண்டும்.
 8-ஆம் நாள்
 10-ஆம் நாள் என்றாவது
 எட்டாவது நாள்
 பத்தாவது நாள்
 என முழு எழுத்து வடிவிலாவது இருக்க வேண்டும்.

பயனாளிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும் என இக்கோப்பில் உள்ளது. 'பயனாளிளுக்குத் தவறாமல் கொடுக்க வேண்டும் என வர வேண்டும்.

நான்காம் வேற்றுமை உருபான 'குவின் பின்னும் வல்லினம் மிகும். அஃதாவது  'கு என்னும் 4 ஆம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லின எழுத்து தொடங்கும் சொல் வந்தாலும் வல்லின மெய்யெழுத்துக் கூடுதலாக வரும்.
சான்றாக, 'மதுரை என்னும் சொல்லுடன் 'கு உருபு சேரும் பொழுது மதுரைக்கு என்றாகிறது.
மதுரைக்கு + கிடைத்தது = மதுரைக்குக் கிடைத்தது.
மதுரைக்கு + செல் = மதுரைக்குச் செல்.
மதுரைக்கு + தா = மதுரைக்குத் தா
மதுரைக்கு + பெருமை = மதுரைக்குப் பெருமை
என வரும்.
இவ்வாறு வரக்கூடிய இடங்களைத் தெரிந்து சரியாக எழுதி னாலேயே  எல்லா இடங்களிலும் சரியாக எழுதலாம்.
சான்றுகள் சில:

  1. பணிமனைக்குச் செல்ல வேண்டும்.
  2. மாவட்ட ஆட்சியகத்திற்குப் போய் வந்தேன்.
  3. மதுரைக்குத் திரண்டு வருக.    
  4. குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும்.
  5. பணத்திற்குக் கணக்கு வேண்டும்.    
  6. தேர்வாணையத்திற்குத் தெரிவிக்க   வேண்டும்.
  7. நிரந்தப்படுத்துவதற்குத் தகுந்த சூழல்  . . .
  8. அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும்.
  9. அவருக்குப் பணியாளருடனான உறவு நன்றாக உள்ளது.
  10. வாங்குவதற்குக் கருதப்படும்.
  11. அரசுக்குப் பொருந்துகிறது.
  12. அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும்.
  13. நியமிப்பதற்குப் பொருத்தமானவர்.
  14. நியமனம் செய்யப் பெறுவதற்குப் பொருத்தமானவர்.
  15. குறியளவுக்கும் குறைவு.
  16. இலக்கிற்குக் குறைவு.
  17. அலுவலருக்குப் பணிந்தனுப்புக.
  18. பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுன்றனவா?
  19. நீண்ட காலங்களுக்குத் தேவையற்றது.    

இவ்வாறு செய்திகளில் 4 ஆம் வேற்றுமை உருபு இடம் பெறும் சில தொடர்கள் பின்வருமாறு அமையும் :-

  1. செயலகத்திற்குப் புதிய ஊழியர்கள் .....
  2. அரசிற்குப் பொதுமக்கள் வேண்டுகோள் ...
  3. ஊழியர்களுக்குப் பதிலாக  (மாற்றாக)
  4. நீக்கப்பட்டவர்களுக்குப் பதில்  (மாற்று)
  5. அலுவலகத்திற்குப் புதிய ஊழியர்....
  6. பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
  7. கோவிலுக்குச் சென்று ...  
  8. ஆகியோருக்குக் கொடுத்தார்.
  9. அணைக்குச் சென்று ....
  10. வெளிநாடுகளுக்குப் பெருமளவு....
  11. விவசாயத்திற்குத் தேவையான...
  12. முன்னேற்றத்திற்குத் தடை.
  13. ஈரானியப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்.  
  14. பத்திரிகைகளுக்குச் செய்தி சேகரித்தவர்.
  15. அரசு வேலைக்குத் தொடர்ந்து தேர்வு
  16. கூட்டத்திற்குப் பின்னர்
  17. வீரர்களுக்குத் தீவிரப்பயிற்சி    
  18. பேச்சு(வார்த்தை)க்குப் பின்னர்
  19. இராமர் கோயில் கட்டுவதற்குச் சட்ட...
  20. செய்தியாளர்களுக்குப் பேட்டி...
  21. செயல் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு...  
  22. கட்சிகளுக்குப் பங்கு ...
  23. நாமக்கல் நகருக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.    
  24. அவர் 20 மாவட்டங்களுக்குச் சென்று ...
  25. இரகசிய இடத்திற்குச் சென்று....
  26. வீட்டிற்குச் செல்கையில்
  27. வந்தவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு...   
  28. போராட்டத்திற்குத் தூண்டிய ...
  29. ரூபாய் 52 கோடி அளவிற்குச் சலுகை
  30. அவருக்குத் தொடர்பு உண்டா?
  31. பாசனத்திற்குத் தண்ணீர்..
  32. இடைவேளைக்குப் பிறகு...
  33. சிம்மராசிக்குக் குரு இடம்பெயர்தல்
  34. அவர்களுக்குப் போதிய வசதி .....
  35. ...ஆலங்குடிக்குச் சிறப்பு.
  36. காவல்துறையினருக்குத் தகவல்...
  37. இதற்குக் கண்டனம்....
  38. நாமக்கல் மாவட்டத்திற்குச் செல்கிறார்.
  39. கடலுக்குச் சென்றனர்.    
  40. பயணிகளுக்குப் புதியது.

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 5


 எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 5

இவ்வாறு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

50.      ஊழியர்களைத் தேர்வு செய்தனர்.

51.      16 பேரைக் கைது செய்தனர்.
52.      புதிய ஆட்களைத் தேர்ந்தெடுத்தனர்.
53.      நடவடிக்கையைக் கைவிடு.
54.      விடுமுறையைக் குறை.   
55.      புதுமுறையைப் பின்பற்று.

56.      நடைமுறையைக் கவனி.
57.      அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
58.      கோசுட்டியைச் சேர்ந்தவர்கள்.  
59.      கும்பலைச் சேர்ந்தவர்கள்.
60.      தமிழகத்தைக் கடும் வெயில் வாட்டுகிறது.

61.      நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார்.
62.      ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
63.      போட்டியிடாததைத் தொடர்ந்து ...
64.      பெயரைப் பரிந்துரைத்தால் ...   
65.      பயிர்களைச் சாகுபடி....

66.      அதனைச் சுற்றி
67.      திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.
68.      கேரளாவைச் சார்ந்தவர்.
69.      தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
70.      குழுக்களைச் சேர்ந்தவர்கள்.    

71.      தேர்தலைக் கருத்தில் கொண்டு .....   
72.      பணிகளைத் தொடங்க வேண்டும்.
73.      ஆகியவற்றைப் பற்றி...
74.      அறிக்கையைப் பெற்றார்.
75.      திட்டத்தைத் தொடங்கினார்.
    
76.      இடங்களைப் பிடித்தனர்.
77.      செயலாளரைச் சந்தித்தார்.
78.      மக்களுக்குக் குறைந்த விலையில் உணவு......
79.      விவரங்களைத் தெரிவித்தார்.   
80.      கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

81.      தண்ணீரைச் சேமி.   
82.      திரு.வாசுபாயைச் சந்தித்து....
83.      கோரிக்கையைப் பரிசீலிக்க
84.      கட்சியைப் பலப்படுத்த....
85.      இதைத் தொடர்ந்து ....

86.      உதவியாளர்களைத் திருப்பி அனுப்பினர்.
87.      விமானத்தைக் கடத்த முயன்றனர்.   
88.      திட்டங்களைத் தொடக்வைத்தார்.
89.      அவர்களைப் போராட்டத்திற்கு ......    
90.      நடவடிக்கையைச் சிவசேனாக் கட்சி ..

91.      ஊழியர்களைத் தூண்டி விட்ட ......    
92.      ...... வாலிபரைக் காவல் துறையினர் ......
93.      விமானத்தைக் கடத்தும் நோக்கு ......  
94.      அணையைத் திறந்தார்.
95.      மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
    
96.      ... சிக்கல்களைத் தமிழக ....
97.      சாதனங்களைப்  பறிமுதல் செய்தனர்.
98.      வாகனத்தைத் திருடியவர்.
99.      ... என்பவரைக் காவல் துறை ....
100.    வாகனங்களைப் பறிமுதல் ....

101.    தீர்ப்பைப் பூந்தமல்லி நீதிமன்ற .....
102.    .... நாடுகளைப் புதிய கோணத்தில் .....
103.    முறையைக் கொண்டுவர ....    
104.    சட்டத்தைப் புதிய வடிவில் ....
105.    2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடு

106.    ஆவணங்களைப் பார்க்கும் போது ....
107.    சொத்துகளைச் சேர்த்திருப்பது ....
108.    பெண்ணைக் கேலி செய்ததால் ....
109.    பட்டத்தைக் கைப்பற்றினார்.    
110.    பட்டத்தைத் தட்டிச் சென்றனர்.

111.    முதலிடத்தைப் பெற்றனர்.
112.    மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
113.    குப்பையைக் கொண்டு .....
114.    உரங்களைத் தயாரிக்கும் .....
115.    கலையைக் கற்பித்து வரும்..

116.    இரயில்களைக்  கவிழ்க்கப் போவதாகத் தெரிவித்தனர்.
117.    நட்புறவைப் பலப்படுத்த உறுதி 


 (தொடரும்)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 4


எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 4

(இங்குள்ள கோப்புகளின் அடிப்படையிலும் பொதுவாக நாம் பயன்படுத்தும் தொடர்களின் அடிப்படையிலும் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.)


1.       மேலாளரைக் கண்டாயா?
2.       ஆட்சியரைச் சந்தித்தேன்.
3.       ஆலையைத் திறக்க வேண்டும். 
4.       செயலரைப் பார்க்கவில்லை.
5.       அணையைத் திறந்து விடுக.    

6.       மருத்துவமனையைப் பார்வையிட்டார்.
7.       தடுப்புமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.  
8.       தொற்று நோய்களைத் தடுக்க வேண்டும்.
9.       பதிவேடுகளைப் பேண வேண்டும்.
10.      வேலையைச் செய்யத் தவறாதே.

11.      கிடங்கினைப் பூட்டவும்.
12.      மருந்துகளைக் கொடு.
13.      சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திரு.
14.      முதலியவற்றைக் கொணர வேண்டும்.
15.      இழப்புகளைக் கணக்கிடு.

16.      அலுவலுகத்தைத் துப்புரவு செய்க.    
17.      பணிகளைச் சிறப்பாகச் செய்க.
18.      முன்கோப்பைத் தேடவும்
19.      சத்துணவைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.
20.      தன்மையினைக் கருதி ...  

21.      கருத்துருவினைப் பரிந்துரைக்கிறேன்
22.      அவரைப் பணியமர்த்திய நாள்
23.      ஏற்பாடுகளைச் செய்து...
24.      என்பதைக் குறிப்பிடுக.    
25.      என்பதைத் தெரிவிக்கவும்.

26.      தொகையைத் தெரிவிக்கவும்.
27.      பணிக்காலத்தைப் பணியாளர் முடித்த நாள்.
28.      பணியினைத் திறமையாக ஆற்று.    
29.      வேண்டுவதைக் கருத்தில் கொண்டு
30.      தொகையைத் திருப்பச் செலுத்தவும்.

31.      பதிவேடுகளைக் கூர்ந்தாய்வு செய்க.
32.      வேலையைத் தீர்வு செய்க.
33.      கணக்கினைச் சரிசெய்க.
34.      அறிக்கையைக்கேட்டுப் பெறுக.
35.      அஞ்சல்களைப் பிரிக்கவும்.

36.      அலுவலகத்தைத் திறக்கும்
37.      நடைமுறைப்   பணியைத் தொடங்கவும்.
38.      அவற்றைப் பற்றிய விவரங்கள்.
39.      கோப்புகளைப் பரிசீலித்தல்.
40.      கோப்புகளைக் கிழிக்காதே.

41.      சொல்வதைச் செய்வோம்.
42.      செய்வதைச் சொல்வோம்.
43.      விலைவாசியைக் குறைக்க வேண்டும்.
44.      புலவாகளைப் பாராட்டவேண்டும்.
45.      குறைகளைப்போக்க வேண்டும்.

46.      நிறைகளைப் பெருக்க வேண்டும்.
47.      திட்டத்தைச் செயலாக்கு.
48.      வழித்தடங்களைக் கூட்டுக.
49.      வழிமுறைகளைக் கூறவும்.

வேற்றுமை உருபு, வல்லினம் முதலியவற்றைத் தெரிந்திருந்தும் மறந்திருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் இல்லாவிட்டாலும் இவை போல் வரக்கூடிய பல இடங்களை அறிந்து கொண்டாலே இயல்பாகவே இவ் வொற்றெழுத்துகளைச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து நீக்க வேண்டிய இடங்களில் நீக்கி எழுதும் பழக்கம் வந்துவிடும்.

மேலும், பரிசீலித்தல், பரிசீலனை என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. இவ்வாறு தமிழ்ச் சொற்கள் அல்லாதவற்றையும் நாம் பயன்படுத்தி வருகின்ற காரணத்தால் குறிப்பிடுகின்றேன். ஆனால், பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டும். மேலும்,

(தொடரும்)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 3

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 3

** இக் கோப்பில் 6 வது விழா எனக் குறிக்கப்பட்டுள்ளது. எண்ணுடன் சேர்த்துப் படித்தால் ஆறுவது விழா என வருகிறது. ஆறுவது சினம் ஆக இருக்கட்டும்; விழாவாக வேண்டா. ஆறாவது விழா என்பதை 6-ஆவது விழா என்றே குறிக்க வேண்டும். வது என்னும் சொல் வரன் என்பதற்கு எதிர்ச் சொல்லாகும். பெண்ணிற்கு வரன் பார்ப்பது போல் பலர் தவறாகப், பையனுக்குப் பெண் பார்ப்பதற்கும் வரன் பார்க்கிறேன் என்பார்கள்.
வது என்னும் சொல்லை மறந்ததால்தான் பார்வை மடல்களின் எண்ணிக்கை, ஆண்டு எண்ணிக்கை முதலியன போன்று எண்ணிக்கை வரிசை முறையைக் குறிப்பிடுகையில் எண்ணையும் எழுத்தையும் இணைத்து இவ்வாறு 2- வது ஆண்டு விழா,  3 - வது கூட்டுறவு வார விழா, 10 - வது பொருட்காட்சி, 100 - வது கைத்தறிக் கண்காட்சி
எனத் தவறாகக் குறித்து வருகின்றனர்.
2  ஆவது ஆண்டு விழா, 
3 ஆவது கூட்டுறவு வார விழா, 
10 ஆவது பொருட்காட்சி,
100 ஆவது கைத்தறிக் கண்காட்சி,
என -ஆவது என்றே குறிக்க வேண்டும். அல்லது எழுத்திலேயே
இரண்டாவது
மூன்றாவது
பத்தாவது
நூறாவது
என்பன போல் குறிக்க வேண்டும்.

மேலும்
10 ஆவதுத் திட்டம், நாற்பதாவதுக் கண்காட்சி , 50 - ஆவதுச் சந்தை
அறுபதாவதுப் பணி மனை
என வல்லெழுத்து இடையில் சேர்க்கப்படுவதும் தவறாகும்.

10 ஆவது திட்டம்
நாற்பதாவது கண்காட்சி
50 ஆவது சந்தை
அறுபதாவது பணிமனை
என்றே எழுத வேண்டும்.

இவ்வறிவுரையில் களப்பணியாளர்கள் பொதுமக்களை சந்திக்க வேண்டும்
எனக் குறிக்கப் பெற்றுள்ளது
பொது மக்களைச் சந்திக்க வேண்டும் என வர வேண்டும்.
இரண்டாம் வேற்றுமை உருபான அடுத்து வல்லினம் மிக வேண்டும்.

சான்றாக, முதல்வர் என்பதுடன் 2 ஆம்வேற்றுமை உருபான   சேரும்பொழுது  முதல்வரை என்றாகிறது. முதல்வரை என்னும் சொல்லுக்கு அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்து வல்லெழுத்தாக இருந்தால், அதற்குரிய இன மெய்யெழுத்து தோன்றும்.  ,,,,,, என்னும்வல்லின எழுத்துகளில் ட, , ஆகியன சொற்களின் முதலில் வாரா. ஆகவே, , கா, கி,...என்பனபோல் வரிசை, வரிசை, வரிசை, வரிசை ஆகியனதாம் சொல்லின் தொடக்க எழுத்தாக வரும். இவ்வரிசைகளிலும் சில எழுத்துகள் சொற்களின்முதலில் வரா. அவற்றைப் பின்னர்ப் பார்ப்போம். இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து இவ்வல்லின எழுத்துகள் தொடக்கமாக அமைந்தால் உரிய வல்லினத்தின் மெய்யெழுத்து சேர்க்கப்பட வேண்டும்.

அஃதாவது க வரிசை வந்தால் க்
ச வரிசை வந்தால்  ச்
த வரிசைவந்தால் த்
ப வரிசை வந்தால் ப்
எனக் கூடுதலாக மெய்யெழுத்தைச் சேர்த்து  ஒலிக்க வேண்டும்.
சான்றாக, முதல்வரை என்பதற்கு அடுத்துக் கண்டார் என வந்தால்,
முதல்வரைக் கண்டார் எனவும்,
சந்தித்தார்  என்று வந்தால் முதல்வரைச் சந்தித்தார்  என்றும்
 தொடர்ந்தார் என வந்தால் முதல்வரைத் தொடர்ந்தார் என்றும் 
பின்பற்றினார்என வந்தால் முதல்வரைப் பின்பற்றினார்என்றும் வரும்.

இங்குள்ள கோப்புகளின் அடிப்படையிலும் பொதுவாக நாம் பயன்படுத்தும் தொடர்களின் அடிப்படையிலும் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.

( தொடரும்)